வீட்டுல வாட்ஸ்ஆப் மெசேஜ் பாத்துருவாங்களோனு பயமா?? இனி தேவையே இல்ல.! வந்தாச்சு வாட்ஸ்ஆப் Disappear Message Feature.!

0
WhatsApp

பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் Dark Mode அப்டேட்க்கு அடுத்து தற்போது Disappear Message Feature ஒன்றை வெளியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது எந்தெந்த பயனர்களுக்கு கிடைக்கும் எப்பொழுது கிடைக்கும் என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை.

Disappear Message Feature:

இந்த Features வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். ஏனெனில் குறிப்பிட்ட நேரத்தில் நாம் தேர்வு செய்த நேரத்தில் Message தானாகவே அழிந்தோ அல்லது மறைந்து விடும். இதனை நாம் 1 மணி நேரம் அல்லது ஒரு நாள் அல்லது ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் என எப்பொழுது வேண்டுமானாலும் Fix செய்து கொள்ளலாம்.

வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் போல தான் இதுவும். இது Power On/Off என்ற வடிவில் அமைந்திருக்கும். தற்போது வரையிலாக இந்த அம்சம் டீபால்ட் ஆக முடக்கப்பட்டுள்ளது, எனவே பயனர்களால் இதை முயற்சிக்க முடியாது.

ப்ரைவேட் சாட்களில் தானாகவே அழிந்து அல்லது மறைந்து போகும் இந்த புதிய வாட்ஸ்அப் அம்சம் வாட்ஸ்அப்பின் 2.20.83 மற்றும் 2.20.84 ஆகிய இரண்டு ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்புகளில் காணப்பட்டுள்ளது.

தற்போது வரையிலாக, வாட்ஸ்ஆப் டெவலப்பர்களின் குழு இந்த அம்சத்தின் கீழ் செயல்படுகிறது என்பது மட்டும் உறுதி. இந்த அம்சம் ஆரம்பத்தில் க்ரூப் சாட்களுக்கு மட்டுமே கிடைக்கும், மேலும் க்ரூப் அட்மின்களால் மட்டுமே இது செயல்படுத்தப்படும். ஒருமுறை இது கிடைத்ததும், வாட்ஸ்ஆப்பின் Contact Info அல்லது Group Settings இல் இது காணப்படலாம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here