சீரியல் மூலம் ரியல் ஜோடியான பிரபலங்கள்.., கடைசியில் டிவோர்ஸில் முடிந்த சம்பவம்!!

0
சீரியல் மூலம் ரியல் ஜோடியான பிரபலங்கள்.., கடைசியில் டிவோர்ஸில் முடிந்த சம்பவம்..,
சீரியல் மூலம் ரியல் ஜோடியான பிரபலங்கள்.., கடைசியில் டிவோர்ஸில் முடிந்த சம்பவம்..,

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியல் மூலம் பிரபலமான ஜோடி தான் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா. இதற்கு முன்னர் விஷ்ணுகாந்த் பல சீரியல்களில் நடித்துள்ளார். அதே போல் சம்யுக்தாவும் நடித்துள்ளார். ஆனால் இவர்கள் இருவருக்கும் பெயர் வாங்கி கொடுத்த சீரியல் என்றால் அது சிப்பிக்குள் முத்து தான். இந்த சீரியலில் ரீல் ஜோடியாக இருந்த அவர்கள் ரியல் ஜோடியாக மாறினர். இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் இருவரும் தங்களது கேரியரில் பிசியாக இருந்து வந்தாலும், பலவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அதை தங்களது இணையத்தில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இருவரும் டைவர்ஸ் க்கு பதிவு செய்துள்ளதாக இணையத்தில் ஒரு அதிர்ச்சி தகவல் தீயாக பரவி வருகிறது. அதாவது இவர்களுக்கு திருமணமாகி 2 மாதங்கள் தான் ஆன நிலையில் இருவரும் தங்களது இணையத்தில் பதிவிட்ட திருமண போட்டோக்கள் அனைத்தையும் நீக்கியுள்ளனர். சமீபத்தில் இன்ஸ்டா பக்கத்தில் உண்மையான காதல் பொய்யானது என்று ஓப்பனாக விஷ்ணு பதிவிட்டிருந்தார்.

அதே போல் சம்யுக்தா மதிக்காத இடத்தில் யாரும் இருக்காதீர்கள். உங்களுக்கு உண்மையாக இருந்தால் மட்டும் கூட இருங்கள் என்று பதிவிட்டு இருந்தார். இதை வைத்து பார்க்கும் பொழுது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவொருக்கொருவர் Follow பண்ணவே இல்லை. இதை வைத்து பார்க்கும் பொழுது டைவர்ஸ் செய்ய போகிறார்களோ என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here