72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடல் நல்லடக்கம்.. பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை!!

0

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உயிரிழந்த பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நேற்று (டிசம்பர் 29) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னராக திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் அவரின் நல்லடக்கம் தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட கட்சித் தலைமை அலுவலகத்தில் தற்போது வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 நாட்களுக்குப் பிறகு அனுமதி கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. அலுவலகத்துக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here