தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்…, அரசே இதுக்காக நிதி ஒதுக்கீடு…, வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்...
தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ் மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து தமிழ் மன்றங்கள் வைத்து தங்களது திறமையை வெளிக்காட்டி வந்தனர். இதனை அறிந்த தமிழக அரசு, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது, கடந்த 2022-2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற மானியக் கோரிக்கையில், அப்போதைய தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத்துறை தங்கம் தென்னரசு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பில், தமிழகம் முழுவதும் உள்ள 6218 அரசின் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் தமிழ் மன்றங்களை மேப்படுத்தி ஆண்டுக்கு மூன்று தமிழ்க் கூடல் நிகழ்ச்சிகளை நடத்த பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- வீதம் என தொடர் செலவினமாக ரூ. 5.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். குறிப்பாக, கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம்’ எனப் பெயர் சூட்டி தமிழ்க் கூடல் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here