சச்சின் பற்றி இதுவரை தெரியாத ரகசியம் – உண்மையை போட்டு உடைத்த கிரிக்கெட் வீரர்!!

0

ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுடன் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய இந்திய அணி தொடரை கைப்பற்றியது. அப்போது நடந்த சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார் ராபின் உத்தப்பா. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

சச்சின் எப்போவுமே லெஜெண்ட் தான் பா:

2008ஆம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுடன் நடந்த கிரிக்கெட் தொடரில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது. விதிமுறைப்படி மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றியதாக கருதப்படும். சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளில் அபார வெற்றிபெற்றது. இதனால், மூன்றாவது இறுதிப் போட்டிக்குச் செல்லாமலே இந்தியா தொடரை வென்றது.

சச்சின் டெண்டுல்கர் இத்தொடரில் 10 போட்டிகளில் களமிறங்கி 44.53 சராசரியுடன் 399 ரன்கள் குவித்திருந்தார். முதலிரண்டு இறுதிப் போட்டியில் 117, 91 என ரன்கள் குவித்து இந்திய அணி தொடரைக் கைப்பற்ற முக்கிய காரணமாக திகழ்ந்தார். இதுகுறித்துப் பேசிய ராபில் உத்தப்பா, தொடரின் போது அவர் மிகுதியான வலியில் அவதிப்பட்டும் அதனை வெளிகாட்டி கொள்ளாமல் விளையாடி வெற்றியை பெற்று தந்தார் என நெகிழ்ச்சியுடன் கூறினார். அப்போது “ராபின் 33, 34 வயது ஆன பிறகு கிரிக்கெட் விளையாடும் போது நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். காயங்கள் அதிக பிரச்சினை உருவாக்கும் என ராபினிடம் சச்சின் கூறினார். அதற்கு இல்லை என்று மறுப்பு தெரிவித்த ராபினிடம் ‘உனக்கு 35 வயதாகும் போது இப்படி சொல் நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்றார் சச்சின்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வருடம் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்த சச்சின் எப்போதும் லெஜெண்ட் தான் பா என கூறியுள்ளார் ராபின் உத்தப்பா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here