தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், லேசான கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இதில் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் தொடரும் கனமழை., 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!!!