எதிர் நீச்சல் சீரியல் கதைக்களம் இப்போது தான் சூடு பிடிக்க துவங்கி உள்ளது. குணசேகரன் அப்பத்தா, ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட எல்லா வேலையும் பார்க்கிறார். ஆனால் அது கடைசி நேரத்தில் தவறி விடுகிறது. இதனால் அப்பத்தாவுக்கு விஷம் வைத்து அவரை கொல்ல திட்டம் போட்டு விட்டார். மேலும் நேற்றைய எபிசோடில் அப்பத்தாவை என்ன செய்தார்கள் என்று தெரியாமல் ஜனனி, ஈஸ்வரி எல்லோரும் தவியாய் தவித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த சீரியலின் நியூ ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் கதிர், குணசேகரன், ஞானவேல் எல்லோரும் அப்பத்தாவை காரில் அழைத்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
அப்போது வழியில் துப்பாக்கி சுடுவது போல் சத்தம் கேட்கிறது. இதனால் கதிர் எல்லோரும் காரை விட்டு இறங்கி அவர்களுடன் சண்டையிடுகின்றனர். பின் ஞானவேல், கதிர் மட்டும் வீட்டுக்கு வருவதை பார்த்து ஈஸ்வரி எல்லோரும் குணசேகரன், அப்பத்தாவை எங்கே என்று கேட்கின்றன. உடனே அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் அப்பத்தாவுக்கு காரியம் செய்து விட்டதாக சொல்கின்றனர். இதைக் கேட்டு ஜனனி நீங்கதான் ஏதோ செஞ்சி இருக்கீங்க என்று சொல்கிறார். உடனே கதிர் அது எல்லாத்துக்கும் காரணம் அந்த ஜீவானந்தம் தான் ஒட்டுமொத்த குடும்பமும் இடிந்து போகிறது. இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.