Home செய்திகள் 1768 தமிழக இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்கள்…, விண்ணப்பிக்க TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

1768 தமிழக இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்கள்…, விண்ணப்பிக்க TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

0
1768 தமிழக இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்கள்…, விண்ணப்பிக்க TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 
ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB), தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பி வருகிறது. நடப்பு (2024) வருடம் நடைபெற உள்ள போட்டித் தேர்வுகளுக்கான வருடாந்திர திட்டமிடலே கடந்த ஜனவரி மாதம் தமிழக TRB வெளியிட்டது. இதன்படி, TN TRB சார்பில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள 1768 இடைநிலை வகுப்பு ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) PAPER 1ல் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
இதன்படி, இந்த தகுதியுடைய ஆசிரியர்கள் நாளை (பிப்ரவரி 14) முதல் மார்ச் 15 ஆம் தேதி மாலை 5pm மணிக்குள் இடைநிலை வகுப்பு ஆசிரியர்கள் தேர்வுக்கு http://www.trb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு வரும் ஜூன் 23ஆம் தேதி OMR Based Exam நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கொடுக்கப்படும் தகவல்களில் ஏதேனும் தவறுகள் இருந்தாலும், கணினி மையங்களில் விண்ணப்பிப்பவர்களால் ஏதேனும்  தவறுகள் நிகழ்ந்தாலும் தேர்வு எழுத்தும் நபர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று TRB குறிப்பிட்டு தெரிவித்துள்ளது. மேலும், சான்றிதழ் சரிபார்ப்பின் போது ஏதேனும் முறைகேடு நிகழ்ந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here