விஷ்ணு  விஷால்  விவாகரத்து விவகாரம்.., இது என் மனைவியின் விருப்பம் தான்.., வெளிவந்த ரகசியம்!!

0
விஷ்ணு  விஷால்  விவாகரத்து விவகாரம்.., இது என் மனைவியின் விருப்பம் தான்.., வெளிவந்த ரகசியம்!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லால் சலாம் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்துடன் மோதிய LOVER திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி வசூலில் பெரும் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார்.

இவரது திருமண வாழ்க்கை பற்றி பார்க்கையில், தன்னுடைய முதல் மனைவி ரஜினி என்பவரை விவாகரத்து செய்து பாட்மிண்டன் வீராங்கனை ஜூவால கட்டாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது விவாகரத்து குறித்து முதல் முறையாக பேசியுள்ளார். அதில் தன்னிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்ற முடிவை ரஜினி தான் எடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கோட்டில் கூட அவர்தான் என்னைப் பிரிய வேண்டும் என்று சொன்னார் அப்போது நான் மௌனமாக இருந்தேன். இதை தொடர்ந்து 2வது திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த நிலையில் ஜூவாலா காட்டாவின் நட்பு கிடைத்தது . அதன் பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக  தெரிவித்துள்ளார். தற்போது இவரின் கருத்து இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here