தமிழக விவசாயிகளே., ஆதார் கார்டு இருந்த போதும்., இதை உடனே பண்ணிடலாம்.., வெளியான  அறிவிப்பு!!

0
தமிழக விவசாயிகளே., ஆதார் கார்டு இருந்த போதும்., இதை உடனே பண்ணிடலாம்.., வெளியான  அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு போன்ற பல நலத்திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போது முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான நலன் காக்கும் கூட்டம் வருகிற 16-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு துவங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது நிறை குறைகளை தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இது தவிர விவசாயிகளுக்கு மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

அதாவது PM கிசான் திட்டத்தின் கீழ் 16 வது தவணை விரைவில் விடுவிக்கப்பட உள்ளது. இதனால் இன்னும் e-KYC யை புதுப்பிக்காத விவசாயிகள் பொது சேவை மையம் அல்லது கைபேசி மூலமாக தாங்களே இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

  • அதன்படி ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் OTP யை PM கிசான் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • மேலும் பயனாளிகள் தங்களது விரல் ரேகையை பொது சேவை மையத்தில் பதிவு செய்வதன் மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம்.
  • இது தவிர கைபேசியில் http://pmkisan.gov.in என்ற இணையதளத்தில் சென்று e-KYC என்னும் பக்கத்தில் ஆதார் எண்ணை இணைத்து உறுதி செய்யலாம்.
  • இந்த மூன்று முறைகளின் மூலம் விவசாயிகள் e-KYCயை விரைவில் இணைக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here