தமிழகத்தில் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கொட்டி கிடக்கும் வாய்ப்புகள்…, மாநில திட்டக் கல்வி இயக்ககம் வெளியீடு!!

0
தமிழகத்தில் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கொட்டி கிடக்கும் வாய்ப்புகள்..., மாநில திட்டக் கல்வி இயக்ககம் வெளியீடு!!
தமிழகத்தில் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கொட்டி கிடக்கும் வாய்ப்புகள்..., மாநில திட்டக் கல்வி இயக்ககம் வெளியீடு!!

தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக துணைத் தேர்வுகள் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்தப்பட்டன. இந்த துணைத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்திருந்தன. இத்தகைய துணைத் தேர்வு எழுதிய மாணவர்களும் தங்களது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்வதற்காக தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்டக் கல்வி இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சில அறிவுறுத்தலை அளித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் அடுத்த என்ன செய்வது என்று தடுமாறாமல் இருக்க, ஐடிஐ, பாலிடெக்னிக், பிற உயர் கல்வி வாய்ப்புகள் பெறும் வகையில் ஆகஸ்ட் 25 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை மாவட்டந்தோறும் முகாம் அமைத்து தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ரூ.2 ஆயிரம் கட்டணத்தில் டிப்ளமோ படிக்கும் வாய்ப்பு, ஐ.டி.ஐ யில் தமிழக அரசு சேர்க்கை கட்டணமாக ரூ.200 மட்டுமே பெறுதல், மாணவர்களை ஊக்கப்படுத்த ரூ.1,600 வழங்குதல், சைக்கிள், பாடப் புத்தகங்கள், சீருடைகள் என அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாநில திட்டக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கருணை அடிப்படையில் இத்தனை பேருக்கு பணி நியமனம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here