தமிழக மக்களுக்கு வெள்ள நிவாரண தொகை…, இந்த பகுதிகளுக்கு கிடைப்பதில் சிக்கல்??

0
தமிழக மக்களுக்கு வெள்ள நிவாரண தொகை..., இந்த பகுதிகளுக்கு கிடைப்பதில் சிக்கல்??
தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 6000 வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இதையடுத்து, நிவாரணத் தொகை பெறுவதற்கான தேதி, நேரம் ஆகியவை குறிப்பிட்டு டோக்கன்களும் விநியோகம் செய்யப்பட்டன. ஆனால், சென்னை மணலியை அடுத்த மாத்தூரில் டோக்கன்கள் இருந்தும் நிவாரணத் தொகை மக்களுக்கு கிடைக்கவில்லை. அதாவது, ஞாயிற்றுக்கிழமை நிவாரணத் தொகை பெற வந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக ரேஷன் கடைகள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றியும் மூடப்பட்டிருந்துள்ளது.
ஆனால், பொதுவாக வெள்ளிக்கிழமை தான் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, விண்ணப்பங்களை உரிய முறையில் ஆய்வு செய்து அவர்களது வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதுவரையிலும், இந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்படவில்லை. இதற்கிடையில், தென் மாவட்டங்களில் கன மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண தொகை வழங்க இன்று (டிசம்பர் 26) முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here