ஐபிஎஸ் அதிகாரி பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு சிறை தண்டனை உறுதி., நீதிபதிகள் அதிரடி உத்தரவு!!!

0

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது, அவரது சுற்றுப்பயணத்திற்கு பாதுகாப்பு அதிகாரியாக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் நியமிக்கப்பட்டு இருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு மனுவை, 2023 ஜூலை மாதம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணை. கடந்த 9ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனையை நீதிபதி பூர்ணிமா அவர்கள், உறுதி செய்து மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 30 நாள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அரசு ஊழியர்களே.., இனி உங்களுக்கு இந்த சலுகை கிடையாது.., வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here