தமிழக கல்லூரிகளுக்கு பறந்த உத்தரவு…, அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

0
தமிழக கல்லூரிகளுக்கு பறந்த உத்தரவு..., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!
தமிழகத்தை பொறுத்த வரையில், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலம் அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு உத்தரவு ஒன்றை தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ளது.
அதாவது, உயர்கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம் மற்றும் தரத்தை மேம்படுத்தவும், உள்கட்டமைப்பு வசதிகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தேசிய அளவிலான உயர்கல்வி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, இந்த கணக்கெடுப்பில் மத்திய அரசு கேட்கும் அனைத்து விவரங்களையும் ஆன்லைனில் பதிவு செய்யும் படி தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் கல்லூரிகளுக்கு உத்தரவு விட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here