Home செய்திகள் வங்கிகளில் PPF அக்கவுண்ட் ஆன்லைனில் எளிதில் ஓபன் செய்யலாம்.., எப்படி தெரியுமா??

வங்கிகளில் PPF அக்கவுண்ட் ஆன்லைனில் எளிதில் ஓபன் செய்யலாம்.., எப்படி தெரியுமா??

0
வங்கிகளில் PPF அக்கவுண்ட் ஆன்லைனில் எளிதில் ஓபன் செய்யலாம்.., எப்படி தெரியுமா??
இன்றைய காலகட்டத்தில் மக்கள், தங்களது பணத்தை சேமிக்கும் வகையில் அஞ்சலகங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்ற திட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த திட்டத்தை SBI, ICICI, மற்றும் HDFC போன்ற வங்கிகளில் எப்படி ஆன்லைன் மூலம் திறப்பது என்பது குறித்து பார்க்கலாம். மேலும் வங்கிகளில் திறக்கப்படும் இந்த PPF அக்கவுண்ட்டில் 500 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். மேலும் இந்த திட்டத்தின் குறைந்தபட்ச கால அளவு 15 வருடங்கள் ஆகும். மேலும் நாம் டெபாசிட் செய்யும் தொகைக்கு  7.1% வட்டி வழங்கப்படுகிறது.
SBI ல் PPF அக்கவுண்ட் திறப்பது எப்படி?

  • முதலில் ‘Request and enquiries’ டேபை கிளிக் செய்து மெனுவில் கொடுக்கப்பட்டுள்ள new PPF Accounts’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • பின் அதில் ஏற்கனவே பதிவிட்டுள்ள PAN உட்பட அனைத்து கஸ்டமர் விவரங்களும் இந்த பக்கத்தில் காண்பிக்கப்படும்.
  • அதில் முகவரி மற்றும் நாமினேஷன் போன்ற அனைத்து விவரங்களையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும். அதன் பின் ‘Proceed’ என்பதை கிளிக் செய்யவும்.
  • அதன் பின் உங்களது மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அடுத்ததாக நீங்கள் ‘PPF Online Application’ என்ற படிவத்தை பிரிண்ட் செய்து, 30 நாட்களுக்கு உங்களுடைய KYC டாக்குமெண்ட்கள் மற்றும் புகைப்படத்தை உங்கள் வங்கிக் கிளையில் சமர்ப்பிக்கவும்.

HDFC ல் PPF அக்கவுண்ட் திறப்பது எப்படி?

  • முதலில் HDFC வங்கியின் நெட் பேங்கிங் பக்கத்தில் LOGIN செய்யவும்.பின் அதில் ‘Public Provident Fund’ என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் ஏற்கனவே பதிவிட்டுள்ள PAN உட்பட அனைத்து கஸ்டமர் விவரங்களும் இந்த பக்கத்தில் காண்பிக்கப்படும்.
  • பின் உங்களுடைய ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் உங்களுடைய படிவம் சமர்ப்பிக்கப்படும்.
  • மேலும் உங்களது அக்கவுண்ட் திறக்கப்படும் என்ற குறுஞ்செய்தி மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.

ICICI ல் PPF அக்கவுண்ட் திறப்பது எப்படி?

  • நெட் பேங்கிங் மூலமாக உங்களுடைய ICICI வங்கியின் அக்கவுண்டிற்கு லாகின் செய்யுங்கள்.
  • பின் Bank Accounts என்பதை கிளிக் செய்து PPF Accounts ஆப்ஷனுக்கு செல்லவும்.
  • அதன் பின் விவரங்களை நிரப்பி, E-Sign செய்தால் PPF அக்கவுண்ட் திறக்கப்படும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here