சிவகார்த்திகேயனின் “SK21” படத்தின் டீசர் தேதி வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
சிவகார்த்திகேயனின் “SK21” படத்தின் டீசர் தேதி வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சிவகார்திகேயன். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘SK 21’. இப்படத்தில் அவருடன் சேர்ந்து சாய் பல்லவி, மகேந்திரன் மற்றும் லடாசிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை குறித்து படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வித்தியாசமாக உருவாகி வரும் SK 21 படத்தின் டைட்டில் டீசர் வருகிற பிப்ரவரி 16ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. மேலும் இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here