டேய் முட்டாள்.., சுடர் உன் குழந்தை.., அபி எனக்கு தங்கச்சி.., வெற்றியிடம் அனைத்து உண்மையை சொல்லும் தருண்!!

0

விஜய் டிவியின் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது தென்றல் வந்து என்னை தொடும் சீரியல். இதில் அபியின் எதிரிகள் கூட்டம் அவர் சென்ற காரை accident செய்துவிடுகின்றனர். இதன் பிறகு சுடருக்கு இருக்கும் ஆபத்தை கருத்தில் கொண்ட தருண், வெற்றியை பாதுகாவலராக இருக்கும் படி அழைத்து வருகிறார்.

இதனிடையில் சுடர் தான் அபியின் குழந்தை என்ற உண்மை வெற்றிக்கு தெரிய வருகிறது. இதனை அறிந்த கண்மணி இவர்கள் இணைந்து விட கூடாது என திட்டம் போட்டு தருண் தான், சுடரின் அப்பா என வெற்றியை நம்ப வைக்கிறார். ஆனால் சுடரின் உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அபியின் வீட்டிற்கு பாடிகாட்டாக வெற்றி வருகிறார். இதனால் ஒரே வீட்டில் இருந்து வரும் அபி மற்றும் வெற்றிக்கு அவ்வப்போது தங்களின் கடந்த கால வாழ்கை நினைவிற்கு வருகிறது.

அதை சில நேரங்களில் இருவரும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியல் குறித்து ஒரு அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது வெற்றி மற்றும் அபியின் செயல்கள் மீது தருணுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதனால் இது பற்றி விஜியிடம் தருண் கேட்கையில் இவர்களின் திருமண பந்தம் குறித்த உண்மையை விஜி கூறுவாராம். இதை கேட்ட தருண் தன் சகோதரியின் வாழ்க்கைகாகவும் சுடரின் எதிர்காலத்தை கருதியும், வெற்றிடம் சுடர் அவருடைய குழந்தை தான் என்ற உண்மையை இனி வரும் எபிசோட்களில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here