Home செய்திகள்  பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்., மத்திய அரசின் உதவியை நாடிய தமிழகம்.,  அடுத்த  நடவடிக்கை இதுதான்!! 

 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்., மத்திய அரசின் உதவியை நாடிய தமிழகம்.,  அடுத்த  நடவடிக்கை இதுதான்!! 

0
 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்., மத்திய அரசின் உதவியை நாடிய தமிழகம்.,  அடுத்த  நடவடிக்கை இதுதான்!! 
சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதையடுத்து அப்பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகளை அழைத்துச் செல்லும்படி பெற்றோர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்பள்ளியில் வெடிகுண்டு இருக்கிறதா என்ற  மோப்ப நாய்களுடன் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இமெயில் மூலம் எடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பதை உறுதி செய்து பொதுமக்களுக்கு போலீசார் தெரிவித்தனர்.
மேலும்  மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் தீவிரப் பணியில் போலீசார் சைபர் க்ரைம் உதவியை நாடியிருந்தனர்‌.  அதைத்தொடர்நது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நபர் சுவிட்சர்லாந்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் proton என்ற மெயிலை பயன்படுத்தி உள்ளது.  இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்த தகவலை proton நிறுவனத்தில் தமிழக அரசு கேட்டிருந்தது.  ஆனால் அந்த நபர் பற்றிய தகவலை proton நிறுவனம் தர மறுத்துவிட்டது.  இதனால் proton மெயிலை முடக்க மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டுள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here