விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்., ரூ.10, 000 கோடியில் அரசின் சூப்பர் திட்டம்!!

0
விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்.,ரூ.10,000 கோடியில் அரசின் சூப்பர் திட்டம்!!
தமிழக விவசாயிகள் கவனத்திற்கு., வேளாண் அமைச்சர் வெளியிட்ட  ஜாக்பாட் திட்டம்! விவரங்கள் உள்ளே!!

மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஆண்டுக்கு ரூபாய் 10,000கோடி நிதி ஒதுக்கீடு செய்து தெலுங்கானா அரசு அதிரடி காண்பித்துள்ளது.

அரசு அறிவிப்பு :

மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பாரத் கிசான் என்ற, திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா அரசு, கடந்த 2018 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு 24 மணி நேரம் தடையில்லா இலவச மின்சாரம் வழங்க அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

படிப்படியாக இந்த திட்டம், விவசாயத்துறை மட்டும் இல்லாமல் தொழில் துறைக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதுகுறித்து பேசிய மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், கடந்த 8 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.36,890 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தார்.

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சிவகார்த்திகேயன்., தெரிஞ்சே போய் அந்த புதக்குழியில் விழப் போறீங்களா?

இது போக மாநிலம் முழுவதும் உள்ள, அனைத்து விவசாய மற்றும் தொழில்துறை சார்ந்த தடையில்லா மின்சார தேவைக்காக ஆண்டுதோறும் ரூபாய் 10,000 கோடி, அரசின் சார்பாக செலவழித்து வருவதாக தெரிவித்தார். மத்திய அமைச்சரவையில் தங்கள் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தால், நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here