தமிழ்நாடு அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்? பா.ம.க. ராமதாஸ் வலியுறுத்தல்!!!

0
தமிழ்நாடு அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்? பா.ம.க. ராமதாஸ் வலியுறுத்தல்!!!
தமிழ்நாடு அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்? பா.ம.க. ராமதாஸ் வலியுறுத்தல்!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் சென்னை பூவிருந்தவல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2008-10 முதல் 2011-13 வரை படித்து பட்டம் பெற்றவர்களுக்கு இதுவரை ஆசிரியராக பணி நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் வருகிற 11 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் அரசின் இந்த செயல் மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும் என பா.ம.க. அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், இந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கப்படாமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த சிறப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இறந்துபோன எதிர்நீச்சல் குணசேகரனின் மகன், மகள்.., இதுவரை யாருமே பார்த்திராத புகைப்படம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here