
நாடு முழுவதும் திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசு துறைகளில் இவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் முதல் வார வெள்ளிக்கிழமையில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் அதை இந்த கூட்டத்தில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.