இந்தியாவுக்கு எதிராக இவர் தான் சிறப்பாக விளையாடுவார்…, பாகிஸ்தானுக்கு ஆதரவு தந்த சேவாக்!!

0
இந்தியாவுக்கு எதிராக இவர் தான் சிறப்பாக விளையாடுவார்..., பாகிஸ்தானுக்கு ஆதரவு தந்த சேவாக்!!

டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் தான் அதிக ரன்கள் அடித்து அசத்துவார் என இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை:

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 ல் இடம் பெறுவதற்கான தகுதி சுற்றுகள் இன்றுடன் முடிவடைய உள்ளன. குரூப் A-யில் நேற்று நடந்த போட்டிகளின் மூலம் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12ல் இடம் பிடித்தது விட்டன. சூப்பர் 12 ல் மீதமுள்ள 2 இடங்களை பிடிப்பதற்காக குரூப் B யின் கீழ் உள்ள ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று தங்களுக்குள் போட்டி போட உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து, நாளை முதல் சூப்பர் 12 சுற்றுகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மூலம் தொடங்க உள்ளது. இதில், இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சேவாக் இந்த போட்டியில் அதிக ரன்களை அடித்து அசத்தக்கூடியவர் பாபர் அசாமாக தான் இருப்பார் என கூறியுள்ளார்.

நாலு ஓவர் வீசி 8 ரன்னு கொடுத்து 7 விக்கெட் எடுத்து அசத்தல்…, ஹாட்ரிக் சாதனை படைத்த இந்திய வீராங்கனை!!

மேலும், விராட் கோஹ்லி பேட்டிங் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தருவது போல, பாபர் அசாம் பேட்டிங்கும் சிறப்பாகவும், பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். இவர் ஒரு முறை, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை பார்த்து நீங்கள் சிறந்த டெஸ்ட் வீரராக வலம் வருவீர்கள் என்று கூறியிருந்தார். இவர் கூறியது போல, டெஸ்ட் தொடர்களில் டேவிட் சிறப்பான வீரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போ, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here