புதிய சாதனையை படைத்த சூர்யாவின் சூரரைப்போற்று – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
புதிய சாதனையை படைத்த சூர்யாவின் சூரரைப்போற்று - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
புதிய சாதனையை படைத்த சூர்யாவின் சூரரைப்போற்று - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

கடந்த கொரோனா காலத்தில் ஓடிடி தளம் மூலம் வெளியான படம் தான் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம். இந்த திரைப்படம் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

ஊரடங்கிலும் தொடரும் மது விற்பனை :

சூரரைப்போற்று:

கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது. இதன் காரணமாக சூர்யா நடித்திருந்த சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கினார். இந்த படம் வெளியான பின்பு அனைத்து தரப்பினராலும் பாராட்டை பெற்றது. மேலும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிருக்கலாம் என்று ரசிகர்கள் சற்று கவலை அடைந்து வந்தனர்.அந்த அளவிற்கு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் ஆஸ்கர் விருத்திற்கான தேர்வு பட்டியலிலும் இடம் பிடித்தது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

சூரரைப்போற்று
சூரரைப்போற்று

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியா சார்பில் இடம் பிடித்த ஒரே படம் சூரரைப்போற்று என்ற பெருமையையும் பெற்றது இந்த திரைப்படம். இதுபோல் பல சாதனைகளை படைத்து வந்த சூரரைப்போற்று திரைப்படம் தற்போது மேலும் ஓர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.அந்த வகையில் IMBD மதிப்பீட்டில் இதுவரை அதிக மதிப்பீட்டை பெற்றிருந்த திரைப்படங்கள் பட்டியலில் ஷாவ்சாங் ரெடெம்பஷன் (9.3 மதீப்பீடு) மற்றும் காட்ஃபாதர்(9.2 மதிப்பீடு) இடம் பெற்றிருந்தது. தற்போது இதனை தொடர்ந்து அதிக IMBD மதிப்பீட்டை பெற்ற படங்கள் பட்டியலில் சூரரைப்போற்று திரைப்படமும் இணைந்துள்ளது. அதன்படி சூரரைப்போற்று திரைப்படம் 9.1 IMBD மதிப்பீட்டை பெற்றுள்ளது. தற்போது இதனை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here