இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. அஜித்துடன் மோதும் சூர்யா.. வெளியான முக்கிய தகவல்!!

0
கோலிவுட் திரையில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவர் தனது 42வது படமான கங்குவா திரைப்படத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, இத்திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மறுபக்கம் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படமும் அதே நாளில்  வெளியாகும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அறிவிப்பால் விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நடிகர் சூர்யா, அஜித் படங்களுடன் போட்டி போட்டு வருவதாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here