ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில், ஹீரோவாக நடித்த விஜே அக்னி நடிக்கும் சீரியலின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
வெளியான தகவல்:
ஜீ தமிழில் ஒளிபரப்பான, முக்கியமான தொடர்களில் ஒன்று செம்பருத்தி. இந்த தொடரில் ஹீரோவாக நடித்த கார்த்திக் ராஜ் பாதியில் இதிலிருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக விஜே அக்னி இந்த தொடரில் கமிட் ஆனார். தற்போது, இவர் சன் டிவியில் புதிதாக தொடங்க உள்ள சக்தி என்ற சீரியலில் நடிக்க இருந்ததாக சொல்லப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவருக்கு ஜோடியாக சித்தி 2 நடிகை ப்ரீத்தி ஷர்மா இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. தற்போது, சக்தி என்ற இந்த சீரியலின் டைட்டிலை மாற்றி “வான்மதி” என வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
உங்க கணவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? சரத்குமார் பற்றி ராதிகாவிடம் கம்ப்ளைன்ட் செய்த மீனா!!
இந்த சீரியலில் ஏற்கனவே பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ள நிலையில், தற்போது டைட்டில் மாற்றப்பட்டிருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விரைவில் இந்த சீரியலுக்கான அதிகாரப்பூர்வ ப்ரோமோ சன் டிவியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.