ரயில்வே பயணிகளே…, இந்த வழித்தடங்களில் மட்டும் சிறப்பு சேவை நீட்டிப்பு…, நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0
ரயில்வே பயணிகளே..., இந்த வழித்தடங்களில் மட்டும் சிறப்பு சேவை நீட்டிப்பு..., நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
ரயில்வே பயணிகளே..., இந்த வழித்தடங்களில் மட்டும் சிறப்பு சேவை நீட்டிப்பு..., நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

பொது மக்களின் நலன் கருதியும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் அரசானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக விடுமுறை நாட்களில் சில சிறப்பு ரயில்களையும், பேருந்துகளை கூடுதலாக போக்குவரத்து துறை பொது மக்களுக்காக வழங்கி வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே மதுரை – கச்சிகுடா உட்பட்ட 4 பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் சேவை தொடரும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இதற்கான டிக்கெட் முன் பதிவுகள் இன்று (அக்டோபர் 6) இரவு 8 முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது,

  • மதுரை – கச்சிகுடா அதிகாலை 5:30 மணி வாராந்திர ரயில் அக்டோபர் 18, 25, நவம்பர் 1, 8, 15, 22, 29 ம் தேதிகளிலும், தெலுங்கானா மாநிலம், காச்சிகுடா – மதுரை இரவு 8:45 மணி வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் 16, 23, 20 நவம்பர் 6, 13, 20, 27 ஆம் தேதிகளிலும் நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
  • நாகர்கோவில் – கச்சிகுடா காலை 6:30 மணி வாராந்திர ரயில் அக்டோபர் 15, 22, 29 ம் தேதிகளிலும், நவம்பர் 5, 12, 19, 26ம் தேதிகளிலும், கச்சிகுடா – நாகர்கோவில் இரவு 7:45 மணி வாராந்திர ரயில் அக்டோபர் 13, 20, 27 நவம்பர் 3, 10, 17, 24ம் தேதிகளிலும் நீட்டித்து இயக்கப்பட உள்ளது.

சென்னை, நாகர்கோவிலிருந்து புறப்படும் இந்த ரயில் சேவை ரத்து., தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு!!!

  • தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் – ராமநாதபுரம் இரவு 9:10 மணி ரயில் அக்டோபர் 11, 18, 25, நவம்பர் 1, 8, 15, 22, 29 ம் தேதிகளிலும், ராமநாதபுரம் – செகந்திராபாத் காலை 9:50 மணி ரயில் அக்டோபர் 13,20, 27, நவம்பர் 3, 10, 17, 24, டிசம்பர் 1ம் தேதிகளிலும் நீட்டித்து இயக்கப்பட இருக்கிறது.
  • ஆமதாபாத் – திருச்சி காலை 9:30 மணி வாராந்திர ரயில் அக்டோபர் 12, 19, 26, நவம்பர் 2, 9, 16, 23, 30 ம் தேதிகளிலும் திருச்சி – அகமதாபாத் காலை 5:40 மணி வாரந்திர ரயில் அக்டோபர் 8, 15, 22, 29 ம் நவம்பர் 5, 12, 19, 26, டிசம்பர் 3ம் தேதிகளிலும் நீட்டித்து இயக்கப்பட இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here