Home செய்திகள் INDW vs AUSW 2024: அரைசதம் அடித்த ஸ்மிருதி மந்தனா…, T20 கிரிக்கெட்டில் நிகழ்ந்த சாதனை!!

INDW vs AUSW 2024: அரைசதம் அடித்த ஸ்மிருதி மந்தனா…, T20 கிரிக்கெட்டில் நிகழ்ந்த சாதனை!!

0
INDW vs AUSW 2024: அரைசதம் அடித்த ஸ்மிருதி மந்தனா…, T20 கிரிக்கெட்டில் நிகழ்ந்த சாதனை!!

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதிய முதல் போட்டி நேற்று (ஜனவரி 5) மும்பையில் நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வைக்கிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 7 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட (54 ரன்கள்) அரை சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் மந்தனா. இதில் 3195 ரன்களுடன் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தமிழக மக்களே…, பொங்கல் பரிசை இந்த தேதியில் தான் பெற முடியும்…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here