ஐசிசி தரவரிசை வெளியீடு: 2வது இடத்தில் ஷுப்மன் கில்.. விராட், ரோஹித் நிலை என்ன?

0
ஐசிசி தரவரிசை வெளியீடு: 2வது இடத்தில் ஷுப்மன் கில்.. விராட், ரோஹித் நிலை என்ன?
ஐசிசி தரவரிசை வெளியீடு: 2வது இடத்தில் ஷுப்மன் கில்.. விராட், ரோஹித் நிலை என்ன?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC அவ்வப்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிற்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது உலக கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் இந்திய வீரர் ஷுப்மன் கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது இந்திய அணியின் நட்சித்திர பேட்ஸ்மேன் ஷுப்மன் கில் 823 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் விராட் கோலி 747 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், 725 புள்ளிகளுடன் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 8வது இடத்திலும் உள்ளனர்.

கூகுளில் புதிய சாதனை படைத்த விராட் கோலி…, ரொனால்டோ, மெஸ்ஸி உடன் இடம் பிடித்து அசத்தல்!!

அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (829) தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் 29ம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மீண்டும் மோத இருப்பதால் இப்போட்டிக்கு பிறகு தரவரிசையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here