தடத்தை நிரந்தரமாக பதித்த சன் டிவி.., இனி விஜய் டிவி பொட்டியை கட்ட வேண்டியது தான்.., வெளியான ஷாக் ரிப்போர்ட்!!

0
தடத்தை நிரந்தரமாக பதித்த சன் டிவி.., இனி விஜய் டிவி பொட்டியை கட்ட வேண்டியது தான்.., வெளியான ஷாக் ரிப்போர்ட்!!
தடத்தை நிரந்தரமாக பதித்த சன் டிவி.., இனி விஜய் டிவி பொட்டியை கட்ட வேண்டியது தான்.., வெளியான ஷாக் ரிப்போர்ட்!!

சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் TRP ரேட்டிங் விவரங்கள் குறித்த விவரங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

TRP ரேட்டிங்

விஜய், சன், கலர்ஸ், ஜீ டிவி போன்ற சேனல்கள் TRP ல் முதலிடம் பிடிப்பதற்காக போட்டி போட்டு கொண்டு பல சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகின்றனர். சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலை பார்ப்பதற்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளனர். அதிலும் விஜய் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு எப்போதும் தனி மவுசு இருக்க தான் செய்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் இந்த சேனல்களில் டாப் 10 க்குள் இருக்கும் சீரியல் ரேட்டிங் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி 10.30 புள்ளிகளை பெற்று ‘கயல்’ சீரியல் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக 9.70 புள்ளிகளை பெற்று ‘சுந்தரி’ சீரியல் 2ம் இடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து ‘வானத்தை போல’ சீரியல் 9.41 புள்ளிகளுடன் 3 ம் இடத்திலும், ‘பாக்கியலக்ஸ்மி’ சீரியல் 9.4 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் 9.3 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளது.

தளபதியின் வாரிசு படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தேதி வெளியீடு.., எங்கு, எப்போது தெரியுமா?

இந்த ரேட்டிங் வரிசைக்கான முதல் மூன்று இடத்தை சன் டிவி சீரியல்கள் தான் பிடித்துள்ளது. இதில் என்ன சோகமான விஷயம் என்றால் ஒரு கட்டத்தில் டாப் 5 க்குள் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்போது 10 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் படி பார்க்கையில் விஜய் டிவியின் TRP கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடிப்பதற்கு சீரியல்களில் மாற்றத்தை கொண்டு வருவார்களா என பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here