கோலிவுட் திரையில் இயக்குனரும் நடிகருமான வலம் வந்தவர் தான் சீமான். மேலும் இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் லியோ.
Enewz Tamil WhatsApp Channel
இப்படத்தின் டீசர் அக்டோபர் 5 ஆம் தேதி இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. ஆனால் அந்த டீசரில் விஜய் தவறான வார்த்தைகள் பேசி இருப்பதாக கூறி பல தரப்பினர் புகார் எழுப்பி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுத்த சீமான் டீசரில் விஜய் பேசியதை விட வெப் தொடர்களில் அதிகமாக கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்க இருக்க விஜய் மீது குற்றம் சுமத்துவது தவறான ஒன்று. மேலும் படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பதால் தான் மக்கள் பிடிக்கிறார்கள் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பேசியுள்ளார்.