Home செய்திகள் IND vs SA 2023: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்.. வெளியான முக்கிய அப்டேட்.!  

IND vs SA 2023: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்.. வெளியான முக்கிய அப்டேட்.!  

0
IND vs SA 2023: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்.. வெளியான முக்கிய அப்டேட்.!  
கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று (டிசம்பர் 21) நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இப்போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட (108 ரன்கள்) சதம் விளாசினார். இதன் மூலம்  சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் கேரள வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here