சம்மர்-க்கு Tour போறிங்களா?? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – உடனே புக் பண்ணுங்க.!

0

பள்ளி விடுமுறைகளில் கோடை காலத்தில் சுற்றுலா செல்வது வழக்கம். ஆனால் அந்த நேரத்தில் பஸ் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதும். அதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ளது. ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது.

கோடை விடுமுறை

விடுமுறை காலத்தில் தான் அனைவரும் சுற்றுலா செல்வார்கள். அநேரத்தில் பஸ் மற்றும் ஆம்னி வண்டிகளில் கட்டணம் 2 மடங்காக உயரும். அதேப்போல் கூட்ட நெரிசலும் அதிகமா இருக்கும். அதை தொடர்ந்து இப்பொழுது தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாத ரயில்கள்

அதன்படி தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும்,நாகர் கோவிலிலிருந்து சென்னை எழும்பூருக்கு 9, 16, 23, 30 ஆகிய தேதிகளிலும், கேரளா எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணி செல்லும் பயணிகளின் வசதிக்காக 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், மேலும் வேளாங்கண்ணியிலிருந்து எர்ணாகுளத்துக்கு செல்வதற்கு 5,12, 19, 26 ஆகிய தேதிகளிலும், எர்ணாகுளத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகளின் வசதிக்காக ஏப்ரல் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளிலும், ராமேஸ்வரத்திலிருந்து எர்ணாகுளம் செல்வதற்காக ஏப்ரல் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளன.

மே மாத ரயில்கள்

தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு 6, 13,20, 27 ஆகிய தேதிகளிலும்,நாகர் கோவிலிலிருந்து சென்னை எழும்பூருக்கு 7, 13, 21, 28 ஆகிய தேதிகளிலும், கேரளா எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணி செல்லும் பயணிகளின் வசதிக்காக 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளிலும், வேளாங்கண்ணியிலிருந்து எர்ணாகுளத்துக்கு செல்வதற்கு 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளிலும், எர்ணாகுளத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகளின் வசதிக்காக 7, 14, 21, 28 ஆகிய தேதிகளிலும், ராமேஸ்வரத்திலிருந்து எர்ணாகுளம் செல்வதற்காக 1, 8, 15, 23, 29 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளன.

ஜூன் மாத ரயில்கள்

தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு 3, 10, 17, 24 ஆகிய தேதிகளிலும், நாகர் கோவிலிலிருந்து சென்னை எழும்பூருக்கு ஜூன் மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், கேரளா எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணி செல்லும் பயணிகளின் வசதிக்காக ஜூன் மாதம் 6, 13, 37 ஆகிய தேதிகளிலும், வேளாங்கண்ணியிலிருந்து எர்ணாகுளத்துக்கு செல்வதற்கு ஜூன் மாதம் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளிலும், எர்ணாகுளத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகளின் வசதிக்காக ஜூன் மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், ராமேஸ்வரத்திலிருந்து எர்ணாகுளம் செல்வதற்காக ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளன.

ஜூலை மாத ரயில்கள்

தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு ஜூலை 1ஆம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாகர் கோவிலிலிருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here