புதுச்சேரி மாநிலத்தில் வருகிற ஏப்ரல் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு:
புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 15ம் தேதி புனித வெள்ளி மற்றும் ஏப்ரல் 17ம் தேதி ஞாயிறு மற்றும் ஈஸ்டர் திருநாள் உள்ளிட்ட தொடர் பண்டிகைகளால் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி சனிக்கிழமை மாநிலத்தில் வேலை நாள் என்பதால் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதாவது, வருகிற 16-ஆம் தேதி சனிக்கிழமை அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால், வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்