பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்யும் வரை போராட்டம்!!!

0

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் விரைவில் முதல்வர் நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என நம்பிக்கை தெரிவித்தனர். இந்நிலையில் ஓய்வூதியங்கள் குறித்த மானிய கோரிக்கை விவாதத்தில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தின் மூலம் பெறப்பட்ட தொகையை தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஏறகனவே மத்திய அரசு, “மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் மாநில அரசுகளுக்கு தேசிய ஓய்வூதிய திட்ட தொகை திரும்ப கிடைக்காது” என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் மு.அன்பரசு தமிழக அரசு மீது கடும் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அதன்படி ” இந்த நொடியில் இருந்து ஆட்சிக்கு எதிராக அரசு ஊழியர், ஆசிரியர்களை ஒன்று திரட்டி வீதியில் இறங்கி போராட உள்ளோம்.

புதிய பங்களிப்பு ஓய்வூதியம், ஒப்பந்த வேலை உள்ளிட்ட நடைமுறை சட்டங்களை திருத்தும் வரை போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து விரோத சட்டங்களை அமல்படுத்தி உள்ளனர். இது தான் தொழிலாளர் மே தின பரிசா? என பல்வேறு விமர்சனங்களை அரசுக்கு எதிராக கடிந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here