தென்னிந்திய திரையில் முன்னணி நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமையுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் 2016 ஆம் திரைக்கு வந்த படம் தான் பிச்சைக்காரன். மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் வசூலில் கல்லா கட்டியிருந்தது.
இதில் விஜய் ஆண்டனிக்கு ஹீரோயினாக நடித்த நடிகை சாட்னா தனது முதல் படத்தின் மூலம் நல்ல ரீச்சை பெற்றார். இதையடுத்து திரைப்பட விநியோகஸ்தர் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்கள் தங்களின் மகனுடைய பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அட, பிச்சைக்காரன் பட ஹீரோயினுக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்கா என ஷாக் அடைந்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
விவாகரத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா.., இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!