மெட்ரோ ரயிலில் இனி இதற்கு அனுமதி கிடையாது.., அதிகாரி முக்கிய அறிவிப்பு!!

0

தற்போதைய அவசர உலகத்தில் பெரும்பாலான மக்கள் தாங்கள் நினைத்த இடத்திற்கு வேகமாக செல்வதற்கு மெட்ரோ ரயில்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பயணிகளுக்காக சென்னை மெட்ரோ நிறுவனம் பல வசதிகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயிலில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல முடியாது என்று மெட்ரோ ரயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், பொதுவாக மெட்ரோ ரயிலில் இறைச்சி கொண்டு செல்வதற்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மெட்ரோ ரயில் பயணச்சீட்டு வழிமுறைகள் 2014 படி, பறவைகள் அல்லது செல்லப்பிராணிகள் (எல்லா வகையான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளும்)மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் அனுமதி அளிக்கப்படவில்லை.

மேலும் இந்த செல்லப்பிராணிகளால் மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகளுக்கு தொல்லையாக இருக்க கூடாது என்பதற்காகவும், சுகாதாரத்தைக் கெடுக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு இது கடைபிடிக்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here