வரலாற்றில் இன்று முக்கிய நாள்.. இந்தியாவின் எம்.எஸ்.தோனி அறிமுகமான தினம்!!

0
. இந்தியாவின் எம்.எஸ்.தோனி அறிமுகமான தினம்
பங்களாதேஷில் உள்ள சிட்டகாங் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 2004ம் ஆண்டு இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதிய 2வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்து அசத்தியது. அதன்பிறகு விளையாடிய பங்களாதேஷ் அணி 234 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை சந்தித்தது.

முன்னதாக இதே நாளில் தான் இந்திய அணியின் ஜாம்பவான் எம்.எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவரது கிரிக்கெட் பயணம் ஒரு ரன் அவுட்டில் ஆரம்பித்து ரன் அவுட்டில் முடிவடைந்தது. இவருக்கு மற்றொரு பெருமை உள்ளது. அதாவது  3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.

தோனியின் கிரிக்கெட் கேரியர்:

538 – போட்டிகள்
526 – இன்னிங்ஸ்
17266 – ரன்கள்
44.96 – சராசரி
224 – அதிகபட்ச ஸ்கோர்
16 – 100கள்
108 – 50கள்
634 – கேட்சுகள்
3 – கேப்டனாக ஐசிசி கோப்பைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here