![முன்னணி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் புது தொடர்.., ஹீரோ யார் தெரியுமா? வெளியான தகவல்!!! முன்னணி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் புது தொடர்.., ஹீரோ யார் தெரியுமா? வெளியான தகவல்!!!](https://enewz.in/wp-content/uploads/2023/12/fetu-dsf-768x495.jpg)
விஜய் டிவி, ஜீ தமிழ், சன், கலர்ஸ் உள்ளிட்ட சேனல்கள் TRP ல் முதலிடம் பிடிப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு பல புதிய தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. அதிலும் பிரைம் டைம் சீரியல்களுக்கு இல்லத்தரசிகள் இடையே எப்போதும் தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. TRP யை பொருத்தவரை எப்போதும் விஜய், சன் டிவி தான் முதலிடத்தை பிடித்து வருகிறது.
![](https://enewz.in/wp-content/uploads/2023/12/1-rfre-1024x660.jpg)
இந்நிலையில் விஜய், சன் டிவிக்கு போட்டியாக TRP ல் முதலிடம் பிடிப்பதற்காக ஜீ தமிழ் இப்போது பல புதிய சீரியல்களை களமிறக்கி வருகின்றனர். அந்த வகையில் இப்போது “நினைத்தேன் வந்தாய்” என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பாகுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதில் ஹீரோவாக நடிகர் கணேஷ் களமிறங்குகிறார். இவரை தொடர்ந்து கீர்த்தனா, ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.