பிக் பாஸ் சீசன் 7 இன்றைய எபிசோடு காண முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் வழக்கம் போல் கமல் என்ட்ரி கொடுத்து பட்டையை கிளப்பியுள்ளார். மேலும் அன்பென்று கொட்டு முரசே என்று பாரதி சொன்னார். அந்த அன்பு மிகுதியாக கொட்டப்பட்டு வழிந்து ஓடியதால் சச்சரவு கொஞ்சம் குறைந்தது. இது பிக் பாஸ்க்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பாடமாக இருக்கும்.
அன்பு அதிகரித்தால் சச்சரவு குறையும். இங்கே வந்த உறவினர்கள் அன்போடு சேர்ந்து அறிவுரைகளையும் வழங்கிட்டு போயிருக்காங்க. இதனால் ஏதாவது பிக் பாஸ் வீட்டுக்குள் மாற்றம் வருகிறதா என்று பார்ப்போம் எனக் கூறியுள்ளார். இதை வைத்துப் பார்க்கும்போது இன்று இரவு மிகப்பெரிய சம்பவம் இருக்கும் என்றுதான் இருக்கு என்று தான் தெரிகிறது.