புதிய தேர்தல் கமிஷனர் நியமனத்தில் சிக்கல்., இப்படித்தான் தேர்வு செய்யணும்? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!!!

0

லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணைய கமிஷனராக இருந்த மூவரில் ஓய்வு மற்றும் ராஜினாமா ஆகிய காரணங்களால் இருவர் விலகி விட்டனர். இதையடுத்து வரும் 14 ஆம் தேதிக்குள் புதிய தேர்தல் கமிஷனருக்கான உத்தேச பட்டியலை தயார் செய்து பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவரிடம், தேர்வுக்குழு சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதைத்தொடர்ந்து மார்ச் 15ஆம் தேதி ஜனாதிபதி மூலம் 2 தேர்தல் ஆணையர் நியமனம் செய்ய இருப்பதாகவும் கூறி உள்ளனர்.

TNPSC குரூப் 4 தேர்வில் பாஸ் ஆக எளிய வழி இதோ.. இத மட்டும் பண்ணுங்க போதும்!!!

இந்நிலையில் இந்த நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜெயா தாகூர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் “கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின் படி பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுக்களே, தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும்.” என குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here