தமிழகத்தில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் வாகனங்களினால் ஏற்படும் மாசுகளை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது இனி வரும் நாட்களில் வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும்.
Enewz Tamil WhatsApp Channel
ஒரு வேலை இந்த சான்றிதழ் இல்லை என்றால் நிச்சயம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இந்த சான்றிதழை ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்ய முதலில் வாகனத்தை மாசு உமிழ்வு சோதனை செய்யும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு வாகனத்தை பரிசோதனை செய்துவிட்டு அதன் மூலம் எவ்வளவு மாசு ஏற்படுகிறது என்பதை வைத்து தான் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.