
நடப்பாண்டில் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளின் சாகுபடிக்கு காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. இதனால் காவிரி நீரை திறந்து விட கோரி தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டு வருகிறது. அதன்படி காவிரி அணை கொள்ளளவை வைத்து 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இக்கூட்ட முடிவில் வருகிற நவம்பர் 23ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 2,600 கன அடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு டெல்டா மாவட்ட விவசாயிகள் உட்பட பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.