Bournvita-வை தினமும் விரும்பி குடிக்கிறீங்களா?? உங்களுக்கான அதிர்ச்சி தகவலை வெளியிட்ட குழந்தைகள் நல அமைப்பு!!

0
Bournvita-வை தினமும் விரும்பி குடிக்கிறீங்களா?? உங்களுக்கான அதிர்ச்சி தகவலை வெளியிட்ட குழந்தைகள் நல அமைப்பு!!
Bournvita-வை தினமும் விரும்பி குடிக்கிறீங்களா?? உங்களுக்கான அதிர்ச்சி தகவலை வெளியிட்ட குழந்தைகள் நல அமைப்பு!!

தற்போதைய காலகட்டத்தில் அதிகபட்ச பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலில் போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் போன்ற ஊட்டச்சத்து பொடிகள் கலந்து கொடுப்பது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் சப்ளை ஆகி வரும் போர்ன்விட்டாவை தயாரித்து வரும் மாண்டலிஸ் இந்தியா நிர்வாகத்திற்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, குழந்தைகள் சாப்பிடும் போர்ன்விட்டாவில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், அவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும் என்ற புகார் எழுந்தது. இதையடுத்து பால் சப்ளிமெண்ட் தொடர்புடைய எல்லா தவறான விளம்பரங்களையும், பேக்கேஜிங் மற்றும் லேபிள்களையும் கூட மதிப்பீடு செய்து திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி தவறான விளம்பரங்களை நீக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு இந்த ஊதியம் வழங்க கூடாது., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

மேலும் போர்ன்விட்டா தயாரிப்பது குறித்த விரிவான தகவல்களை 7 நாட்களுக்குள் வழங்குமாறு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் ரெவன்ட் ஹமாட்சிங்கா என்பவர் போர்ன்விட்டாவில் அதிக சர்க்கரை உள்ளதாகவும், குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய சர்க்கரை அளவை விட இது அதிகம் என்றும் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வைரலான நிலையில், மாண்டலிஸ் நிறுவனம் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. அதன் பின்னர் அவர் அந்த வீடியோவை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here