சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடக்கக்கூடாது- விஜய்..! மனிதனை காப்பாற்ற மேல இருந்து யாரும் வரமாட்டாங்க- விஜய் சேதுபதி..!

0

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஒரு ஹோட்டலில் நடந்து முடிந்தது. அதில் விஜய் அவர்கள் ‘ரெய்டு இல்லாத வாழ்க்கை வேணும்’ எனவும் விஜய் சேதுபதி அவர்கள் ‘மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வருவான்’ எனவும் பேசியுள்ளனர்.

நடிகர் விஜய் ..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் மாஸ்டர் இந்த படத்தின் ஆடியோ லான்ச் நேற்று நடந்தது. விஜய் அதில் கோட் சூட்டில் கலக்கலாக வந்தார். அதில் விஜய் கூறியதாவது,

நண்பர் அஜித் போல கோட் சூட்டில் வந்தேன் என்று மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார், மேலும் மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்க வேண்டும் சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடக்கக்கூடாது,

உண்மையா இருக்கணும்னா சில நேரத்துல ஊமையா இருக்கவேண்டியதா இருக்குங்க, நம்மள பிடிக்காதவங்க நம்ம மேல கல் எறிவாங்க அதையெல்லாம் பொருட்படுத்தாம நதி போல நமது கடைமையை செய்து கொண்டே இருக்கணும் எனவும் ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நடிகர் விஜய் சேதுபதி ..!

அதை தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி அவர்கள், மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வருவான் மேல இருந்து யாரும் வர மாட்டாங்க என்றும் கடவுளை காப்பாற்றுகிறேன் என்று கூறுபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறினார். கடவுளுக்கும் மனிதனுக்கும் எந்த மதமும் கிடையாது ஆதலால் எல்லா மனிதர்களிடமும் அன்பை பகிர்ந்து சகோதர தன்மையுடன் பழகவேண்டும் என்றும் கூறினார்.

கொரோனா வைரஸ் பற்றி யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். இந்த தருணத்தில் நம்முடைய உறவினர்களே நம்மை தொடுவதற்கு யோசிக்கும்போது சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here