இது என்னடா லோகேஷ்க்கு வந்த சோதனை.., “கைதி” படத்தை வச்சு செய்யும் சம்பவம்!!

0
இது என்னடா லோகேஷ்க்கு வந்த சோதனை.., "கைதி" படத்தை வச்சு செய்யும் சம்பவம்!!
இது என்னடா லோகேஷ்க்கு வந்த சோதனை.., "கைதி" படத்தை வச்சு செய்யும் சம்பவம்!!

தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த கொஞ்ச காலத்திலே வெற்றி கண்ட இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் தளபதி விஜய்யை வைத்து லியோ படத்தை எடுத்து வருகிறார். இதற்கு முன்னர் கைதி, விக்ரம் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார் லோகேஷ்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் கைதி திரைப்படம் தான் லோகேஷுக்கு திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் இரவு நேரத்தில் நடப்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதனால இந்த படத்தில் ஹீரோயின் மற்றும் பாடல்கள் இல்லாமல் எடுத்து ஒரு தரமான ஆக்சன் திரைப்படமாக கொடுத்திருப்பார் லோகேஷ்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வேரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்தை பல மொழிகளில் டப்பிங் செய்ய பிரபலங்கள் போட்டி போட்டனர். அந்த வகையில் ஹிந்தியில் டப்பிங் செய்யும் உரிமையை நடிகர் அஜய் தேவ்கன் பெற்றார். அதுமட்டுமின்றி இந்த படத்தை அவரே நடித்து அவரே இயக்கியுள்ளார். பொதுவாக தமிழ் படங்களை டப்பிங் என்ற பெயரில் கொல நாசம் செய்வது வழக்கம். இதில் லோகேஷ் படமும் சிக்கியுள்ளது.

அட்ரா சக்க.., லெஜெண்ட் சரவணன் பெரிய ஆளுதான்ப்பா.., இயக்குனர் லோகேஷை வளைத்து போட்ட சம்பவம்!!

ஆமாங்க, லோகேஷ் இந்த படத்தில் ஹீரோவை வைத்து ஆக்சன் படமாக எடுத்த நிலையில், அஜய் தேவ்கன் இந்த படத்தை அப்படியே மாற்றியுள்ளார். அதாவது, அஜய் தேவ்கன் கைதி படத்தை போலா என்ற பெயரில் எடுத்து வருகிறார். மேலும் இப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

அப்படத்தில் அமலா பால், தபு மற்றும் ராய் லட்சுமி ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இதில் அமலா பால், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகை தபு, கைதி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நரேன் கேரக்டரில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து ராய் லட்சுமி ஒரு ஐட்டம் சாங்கில் நடித்துள்ளார் என்று இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here