Home பொழுதுபோக்கு சினிமா ஜெயிலர் படத்திற்கு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.., ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்!!

ஜெயிலர் படத்திற்கு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.., ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்!!

0
ஜெயிலர் படத்திற்கு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.., ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்!!
ஜெயிலர் படத்திற்கு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.., ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்!!

சூப்பர் ஸ்டார் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் வசூல் 600 கோடியை நெருங்கும் நிலையை எட்டி உள்ளது. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கிடையில் இப்படத்தில் அதிகமான வன்முறை காட்சிகள் இருக்கும் நிலையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது தவறு என்றும், இதனால் ஜெயிலர் படத்தை தியேட்டரில் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி என்பவர் கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

சந்திரமுகி ஆட்டம் ஆரம்பம்.., நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த முக்கிய அப்டேட்!!

இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு தொடர்ந்தவர் மனுவை வாபஸ் செய்ய அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். அதாவது இது பொது நல வழக்கு இல்லை என்றும் இது விளம்பர நல வழக்கு என்று கூறி நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here