மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் – வெஸ்ட் இண்டீஸ் & இங்கிலாந்து டெஸ்ட் சீரிஸ்..!

0
England Cricket
England Cricket

கொரோனா தொற்றால் சர்வேதச அளவில் எந்த கிரிக்கெட் போட்டிகளுக்கும் நடத்தப்படாத நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

கொரோனா பரவல்:

டிசம்பர் 1 ஆம் தேதி சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று உலக நாடுகள் அனைத்திலும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சர்வேதேச அளவில் எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளும் நாடகத்தை நிலையில் இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் தொடரானது, ஜூன் மாதமே நடக்க உள்ளதாக இருந்தது. ஆனால் இந்த தொற்று காரணமாக இப்போட்டிகள் தள்ளி போனது. ஓவல் மற்றும் எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால் இப்போட்டி நடக்காதது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

டெஸ்ட் போட்டி:

இதனிடையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இன்று இங்கிலாந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன் பின்னர் பல்வேறு கட்ட சோதனைகள் மற்றும் பயிற்சியைத் தொடர்ந்து ஜூலை 8 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகும் என்று செய்திகள் கூறப்படுகின்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்:

இந்த டெஸ்ட் போட்டிகளில், எச்சில் கொண்டு கிரிக்கெட் பந்தை ஷைன் செய்ய ஐசிசி அமைப்புத் தடை விதித்துள்ளது. மிகவும் பாதுகாக்கப்பட்டுள்ள ஏஜஸ் பவுல் மற்றும் ஓல்டு டிரஃபோர்டு மைதானங்களில் ரசிகர்கள் இல்லாமல் மூன்று டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளன. இரண்டு மைதானங்களிலும் வீரர்கள் தங்குவதற்கு ஆன்-சைட் ஓட்டல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர் குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், “தற்போதைய வைரஸ் தொற்று நிலைமையானது எல்லோர் மனதிலும் பயத்தை விதைத்துள்ளது. ஆனால், இப்போது நடக்க உள்ள கிரிக்கெட் தொடரை நினைத்து மொத்த கிரிக்கெட் உலகமே பெருமிதப்படும்,” என்றுள்ளார்.

வீரர்கள் மிஸ்ஸிங்:

. 14 பேர், பிராதன வீரர்களாகவும், 11 பேர் ரிசர்விலும் இருப்பார்கள். இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு எவ்வளவு எடுத்துக் கூறியும், மேற்கிந்தியத் தீவுகளின் டேரன் பிராவோ, ஷிம்ரோன் ஹெட்மயர் மற்றும் கீமோ பவுல் உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பைக் காரணம் காட்டி தொடரில் பங்கேற்க மறுத்துவிட்டனர். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம் இதனால் எதிர்கால அணி தேர்வில் வெஸ்ட் இண்டீஸ் அணி பிரதிபலிக்காது என்று வருத்தம் தெரிவித்து உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். ஜூலை மாதம் முதல் வாரம் அவர் தன் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரூட், முதல் டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார். அதன் பின்னர் நடக்கும் இரு போட்டிகளிலும் அவரின் பங்கேற்பு கேள்விக் குறியாகவே உள்ளது. ரூட் இல்லாத காரணத்தால், துணை கேப்டனும் நட்சத்திர ஆல்-ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்தின் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பென் ஸ்டோக்ஸை கேப்டனாக நியமிப்பது குறித்து இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், “பென் ஸ்டோக்ஸ் தற்போது ஒரு நல்ல ஃபார்மில் இருக்கிறார். கேப்டன்ஷிப் கொடுக்கப்படுவதால் அவரின் ஆட்டத்தில் மாற்றம் வரலாம். அதை நான் பார்க்க விரும்பவில்லை. பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்களுக்கு கேப்டன்ஷிப் கொடுக்கப்பட்டால் அவர்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படலாம்,” என்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here