தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களின் முடிவில் தென் ஆப்பிரிக்கா 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து 3 வது மற்றும் கடைசி T20 போட்டி கௌடெங்கில் உள்ள ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இன்று (டிசம்பர் 14) இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.
இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின் படி ஆட்டத்தின் போது மழை குறுக்கிடாது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. அதாவது கௌடெங்கில் உள்ள ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில், அதிகபட்ச வெப்பநிலை 26 C மற்றும் குறைந்தபட்சம் 20 C வானிலையில் மாற்றம் காணப்படும். மேலும் 15 கிமீ / 12 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆட்டம் நடைபெறும் நாள் முழுவதும் மழை அச்சுறுத்தல் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக அரசு பள்ளிகளில் புது திட்டம்.., இனி இதையும் பின்பற்ற வேண்டும்.., பள்ளிகவித்துறை அதிரடி!!!