பல ஆண்டு பகையை மறந்து மீண்டும் இணைந்த இளையராஜா, கங்கை அமரன் – வெளியான குடும்ப புகைப்படங்கள்!!

0
பல ஆண்டு பகையை மறந்து மீண்டும் இணைந்த இளையராஜா, கங்கை அமரன் - வெளியான குடும்ப புகைப்படங்கள்!!

கருத்து வேறுபாட்டால் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக பிரிந்திருந்த இளையராஜா மற்றும் கங்கை அமரன் இருவரும் பகையை முழுமையாக மறந்துவிட்டு மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் சந்தித்துகொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அண்ணனுடன் இணைந்த கங்கை அமரன்:

இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், திரைப்பட இயக்குனர் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர் கங்கை அமரன். இவரது சகோதரரான இளையராஜாவை குறித்து கங்கை அமரன், அவதூறாக பேசியதாக இருவரும் பல வருடங்களுக்கு முன்பு சண்டையிட்டு கொண்டனர். இந்த சண்டையால் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக எந்த வித தொடர்பும் இல்லாமல் இருவரும் பிரிந்து இருந்தனர்.

ஆனால் கங்கை அமரனின் மகன்களான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி இருவருமே இளையராஜாவின் மகனான யுவனுடன் தொடர்பில் இருந்து வந்தனர். பல ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இந்த சண்டையை முடித்துக்கொள்ள சமரசம் பேசியுள்ளனர். தற்போது பகை அனைத்தையுமே மறந்து இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இருவரும் பேசிக்கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வீல் சேரில் முடங்கி போன பிரபல காமெடி நடிகர் – மருத்துவ உதவி செய்து வரும் தமிழக முதல்வர்!!

பல ஆண்டுகளுக்கு பிறகு அண்ணனுடன் இணைந்ததால் “இன்று நடந்த சந்திப்பு .. இறை அருளுக்கு நன்றி … உறவுகள் தொடர்கதை” என ஒரு கவிதை தொகுப்பை கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here