சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வாரம் தோறும் அனைத்து வகையான கிரிக்கெட்டிற்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை பார்க்கும்போது, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடியதால் 1 இடம் முன்னேறி, 761 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளார்.
இதே போல, ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில், பேட்ஸ்மேன்களில் சுப்மன் கில் (801), விராட் கோலி (768) மற்றும் ரோஹித் சர்மா (746) புள்ளிகளுடன் 2, 3 மற்றும் 4 வது இடத்தை பிடித்துள்ளனர். இதன் மூலம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். T20க்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில்,சூர்யகுமார் யாதவ் (1 வது), ருதுராஜ் கெய்க்வாட்(8 வது) இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.., மது பாட்டில்கள் விலை இனி உயர்த்தப்படும்.., வெளியான அறிவிப்பு!!!